Images
  • Singapore Sports Hub
    படம்: Facebook / Singapore Sports Hub

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படும் விளையாட்டு நடுவம்

காலாங்கில் அமைந்திருக்கும் விளையாட்டு நடுவம் (Sports Hub) இன்று மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த அது, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளில் துடிப்புடன் பங்கெடுத்தது.

OCBC Arena உள்ளிட்ட வசதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பான விதிமுறைகள் அங்கு நடப்பிலிருக்கும்.

வருகையாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

  • ஒரு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் SafeEntry அல்லது அடையாள அட்டை, QR code போன்ற வழிகளில் பதிந்துகொள்வது கட்டாயம்.
  • நுழையும்போது உடல்வெப்பச் சோதனைக்கு உட்படவேண்டும்.
  • உடற்பயிற்சி செய்யாமல் ஓய்வெடுக்கும் நேரங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயம்.
  • 5 பேருக்கு மேல் கூடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்
  • பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும்
  • தனிமைப்படுத்தல் அல்லது வீட்டிலேயே தங்கியிருப்பதற்கான உத்தரவை நிறைவேற்றுவோர் வளாகத்திற்குள் நுழையக் கூடாது.

Top