Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முகக்கவசம் அணிந்தவாறு மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி - Sport Singapore

சிங்கப்பூரில், முகக்கவசம் அணிந்தவாறு மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்று Sport Singapore அமைப்பு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
முகக்கவசம் அணிந்தவாறு மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி - Sport Singapore

(படம்: Pexels/William Choquette)

சிங்கப்பூரில், முகக்கவசம் அணிந்தவாறு மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு என்று Sport Singapore அமைப்பு தெரிவித்துள்ளது.

நாளையிலிருந்து நடப்புக்கு வரும் 2ஆம் கட்ட உயர் விழிப்புநிலைக்கு ஏற்ப அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவலை முறியடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் சுமார் ஒரு மாதம் நீடிக்கும்.

உடற்பயிற்சி நிலையங்களில், எடை தூக்குவது, உடல் உரமேற்றுவது போன்ற பயிற்சிகளுக்கு அனுமதி இல்லை என்று Sport Singapore கூறியது.

சுவரேற்றம் உள்ளிட்ட பயிற்சிகளுக்குரிய சாதனங்களை அவை வழங்கக்கூடாது என்றும் அது சொன்னது.

பொது இடங்களின் வழியே கிருமி பரவும் அபாயத்தை முறியடிக்க அவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குழுவுக்கு இரண்டு பேர் என்ற அளவில், அதிகபட்சம் 30 பேர் முகக்கவசம் அணிந்து நடவடிக்கைகளில் பங்கேற்கலாம்.

உரிய பாதுகாப்பு இடைவெளி விதியைப் பின்பற்றி பொது இடங்களில் பெரிய அளவில் வகுப்புகளை நடத்த அனுமதி உண்டு.

திறந்தவெளி நீச்சல், சைக்கிளோட்டம் போன்ற பெரிய நடவடிக்கைகளில் அதிகபட்சம் 50 பேர் பங்கேற்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்