Images
  • sportman

ஜோசஃப் ஸ்கூலிங் இவ்வாண்டுக்கான விளையாட்டு வீரராகத் தேர்வு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான விளையாட்டு வீரர் விருதை, நீச்சல் நட்சத்திரம் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) தட்டிச்சென்றுள்ளார்.

சிங்கப்பூர் விளையாட்டு விருது நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

ஸ்கூலிங் அந்த விருதைப் பெற்றிருப்பது இது 6ஆவது முறை.

அந்த விருது 1968ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, அதனை ஆக அதிகமான முறை பெற்றுள்ள விளையாட்டாளரும் அவரே.

இவ்வாண்டுக்கான விளையாட்டு வீராங்கனை விருதைக் குறிசுடும் விளையாட்டாளர் மார்ட்டினா வெலோசொ (Martina Veloso) முதல்முறையாக வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களை 19 வயது வெலோசொ வென்றார்.


Top