Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கொரோனா கிருமித்தொற்றுக்கு அப்பாற்பட்ட அம்சங்கள் மீதும் அக்கறை தேவை : சிங்கப்பூர் மக்கள் கட்சி

இவ்வாண்டுத் தேர்தல், கொரோனா கிருமித்தொற்று பற்றிய அம்சம் மட்டுமல்ல என்று சிங்கப்பூர் மக்கள் கட்சி கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
கொரோனா கிருமித்தொற்றுக்கு அப்பாற்பட்ட அம்சங்கள் மீதும் அக்கறை தேவை : சிங்கப்பூர் மக்கள் கட்சி

(படம்: CNA)

இவ்வாண்டுத் தேர்தல், கொரோனா கிருமித்தொற்று பற்றிய அம்சம் மட்டுமல்ல என்று சிங்கப்பூர் மக்கள் கட்சி கூறியுள்ளது.

தேர்தல் தினத்தன்று, டெங்கிக் குழுமங்கள், அவற்றால் ஏற்படும் ஆபத்துகள் முதலியவற்றையும் பற்றியது என்று அது குறிப்பிட்டது.

பல வட்டாரங்களில் டெங்கிக் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வாக்களிப்பு தினத்தன்று, அதிகமானோர் வரிசைகளில் நின்று வாக்களிக்க வேண்டியிருக்கும்.

அதனால் தேசியச் சுற்றுப்புற அமைப்பும் தேர்தல் துறையும் பிரசார ஓய்வு நாளன்று, கொசுப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக சிங்கப்பூர் மக்கள் கட்சியின் தலைமைச் செயலாளர் ஸ்டீவ் சியா(Steve Chia) கூறினார்.

பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி வட்டாரவாசிகளைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய அக்கட்சியின் வேட்பாளர் மெல்வின் சியூ (Melvyn Chiu), பிரசாரம் குறித்து மனநிறைவு தெரிவித்தார்.

வட்டாரத்தின் பெரும்பாலான புளோக்குகளுக்குச் சென்றதாகவும் வாக்காளர்கள், கட்சியின் தேர்தல் அறிக்கைப் பற்றி அறிந்திருந்ததாகவும் அவர் சொன்னார்.

இருப்பினும், ஒரு சிலர், எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கத் தயங்குவதாகத் திரு. சியூ குறிப்பிட்டார்.

தொகுதியில் போட்டியிடும் அந்தக் கட்சியின் மற்றொரு வேட்பாளர் திரு. ஒஸ்மான் சுலைமான் ( Osman Sulaiman) வாக்காளர்களின் வாக்குகள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தோருக்கு எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்