Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போயிங் நிறுவனத்திடமிருந்து 737 MAX ரக விமானங்களை வாங்கும் முடிவில் மாற்றமில்லை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

போயிங் நிறுவனத்திடமிருந்து,  737 MAX ரக விமானங்கள் 31ஐ வாங்கும் முடிவில் மாற்றமில்லையென, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் பூங் (Goh Choon Phong) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
போயிங் நிறுவனத்திடமிருந்து 737 MAX ரக விமானங்களை வாங்கும் முடிவில் மாற்றமில்லை: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

(படம்: REUTERS/Edgar Su)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

போயிங் நிறுவனத்திடமிருந்து, 737 MAX ரக விமானங்கள் 31ஐ வாங்கும் முடிவில் மாற்றமில்லையென, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் பூங் (Goh Choon Phong) தெரிவித்துள்ளார்.

அந்த ரகத்தைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளான நிலையிலும் அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படவில்லை என்றார் அவர்.

எத்தியோப்பியாவிலும், இந்தோனேசியாவிலும் அந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாயின.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் வட்டார நிறுவனமான SilkAir, தான் பயன்படுத்திவந்த போயிங் 737 MAX ரகத்தின் ஆறு விமானங்களைச் சேவையிலிருந்து மீட்டுக்கொண்டது.

ஆண்டு வருமானம் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியிருப்பதாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நேற்று அறிவித்தது. ஆனால், அந்த வருமானம் லாபத்தை உயரச் செய்யவில்லை. விமான எரிபொருள் விலை உயர்வு அதற்குக் காரணம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்