Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவையைத் தொடங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமானச் சேவைகளை வரும் 29ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
இந்தியாவின் 8 நகரங்களுக்குப் பயணிகள் விமானச் சேவையைத் தொடங்கவுள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

(படம்: Roslan RAHMAN/AFP)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கான பயணிகள் விமானச் சேவைகளை வரும் 29ஆம் தேதி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நோய்ப்பரலால் ரத்துசெய்யப்பட்டிருந்த சேவைகள் மீண்டும் தொடங்கவிருக்கின்றன.

இந்தியாவின் 8 நகரங்களிலிருந்து பயணிகள் விமானச் சேவைகளும் வழங்கப்படும்.

சென்னை, டில்லி, மும்பை நகரங்களிலிருந்து சிறப்புப் பயண ஏற்பாட்டின்கீழ் வரும் பயணிகள் விமானச் சேவையும் அவற்றில் அடங்கும்.

அவற்றுடன் அகமதாபாத் (Ahmedabad), பெங்களூர் (Bangalore), ஹைதராபாத் (Hyderabad), கொச்சி (Kochi), கொல்கத்தா (Kolkata) ஆகியவற்றில் இருந்தும் பயணிகள் விமானச் சேவை வழங்கப்படும்.

Scoot விமானங்கள் திருச்சி, அமிர்தசரஸ் (Amritsar), ஹைதராபாத் ஆகியவற்றுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்