Images
  • sq landing longest flight
    (படம்: Singapore Airlines)

நியூயார்க்கைச் சென்றடைந்துள்ள உலகின் ஆக நீண்ட இடைநில்லா விமானம்

சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 11.30 மணியளவில் புறப்பட்ட SQ22 விமானம், சுமார் 18 மணி நேரத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 5.30 மணியளவில் நியூயார்க்கின் நியூவார்க் லிபர்ட்டி (Newark Liberty) அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் புதிய A350-900ULR ரக விமானத்தைப் பயன்படுத்தியது.

அதில் 150 பயணிகளும் 17 விமான ஊழியர்களும் சென்றனர்.

விமானம் முதலில் வாரத்துக்கு மூன்று முறை சேவை வழங்கும். இந்த மாதம் 18-ஆம் தேதிக்குப் பிறகு அன்றாடச் சேவை தொடங்கும் என்று நிறுவனம் சொன்னது.

இரண்டு விமானிகள், சிறப்பு ஆரோக்கிய உணவு , 7 வாரத்துக்கு மேல் பொழுதுபோகக்கூடிய அளவுக்குத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை விமானத்தின் சிறப்பம்சங்கள்.

16,700 கிலோமீட்டர் தொலைவைப் பயணிகள் உற்சாகத்துடன் கடக்க அவை உதவும். 

Top