Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் விரைவில் SRS எனப்படும் துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

வாசிப்புநேரம் -
துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்

(படம்: Reuters/Edgar Su)

சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் விரைவில் SRS எனப்படும் துணை வேலைஓய்வுத் திட்டத்தைப் பயன்படுத்தி சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

திட்டத்தில் முதலீடு செய்வதற்கான உச்சவரம்புத் தொகை 200,000 வெள்ளிக்கு உயர்த்தப்படும்.

தற்போது அந்த உச்சவரம்பு 100,000 வெள்ளியாக உள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து மாற்றம் நடப்புக்கு வரும் என்று சிங்கப்பூர் நாணய வாரியம் அறிவித்துள்ளது.

துணை வேலைஓய்வுத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் DBS, OCBC, UOB ஆகிய வங்கிகளின் இணையத்தளங்கள் மூலம் புதிய திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

ரொக்கத்தோடு விண்ணப்பம் செய்வதைப் போலவே இணையத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் குறைந்தபட்சத் தொகை 500 வெள்ளி.

ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 வெள்ளி கட்டணம் கழிக்கப்படும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்