Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ST Engineering ஆகாயவெளிக் குழுமத்தின் துணை நிறுவனத்தில் பெரிய அளவில் இணைய ஊடுருவல்

ST Engineering ஆகாயவெளிக் குழுமத்தின் துணை நிறுவனத்தில் பெரிய அளவில் இணைய ஊடுருவல் 

வாசிப்புநேரம் -

ST Engineering ஆகாயவெளிக் குழுமத்தின் அமெரிக்கத் துணை நிறுவனம் பெரிய அளவில் இணைய ஊடுருவலுக்கு உள்ளாகியிருக்கிறது.

ஒன்றரை Tera byte அளவிலான தகவல்கள் திருடு போயிருக்கலாம் என்று ஓர் இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்தது.

VT San Antonio ஆகாயவெளி நிறுவனம் மீதான இணையத் தாக்குதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியிருக்கக்கூடும் என்று CYFIRMA எனும் இணையப் பாதுகாப்பு நிறுவனம் கூறியது.

தகவல்களை வெளியிடாமல் இருக்கப் பணம் கொடுக்கப்படாததால், அவை பொதுத் தளங்களில் கசியவிடப்பட்டன.

அவற்றுள், அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்த விவரங்கள், நாசா போன்ற அரசாங்கம் தொடர்பான அமைப்புகள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்கள் ஆகியவற்றின் தகவல்களும் அடங்கும்.

தனது கட்டமைப்பில் ஊடுருவல் நடந்திருப்பதை உறுதி செய்த VT San Antonio நிறுவனம், அபாயம் முறியடிக்கப்பட்டு விட்டதாக கூறியது.

சில அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கணினிக் கட்டமைப்பின் செயல்பாடுகள் உடனே நிறுத்தப்பட்டதாகவும் அந்த நிறுவனம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்