Images
  • ST
    ( படம்: REUTERS )

அறிவார்ந்த விளக்குக் கம்பத் திட்டத்தைச் சோதிப்பதற்கான குத்தகையை ST Engineering நிறுவனம் பெற்றுள்ளது

சிங்கப்பூரில் அறிவார்ந்த விளக்குக் கம்பத் திட்டத்தைச் சோதிப்பதற்கான 7.5 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள குத்தகையை ST Engineering நிறுவனம் பெற்றுள்ளது.

உணர்கருவிகள், கேமராக்கள் போன்ற அம்சங்களும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் அதிகாரத்துவக் குத்தகை இணையத்தளத்தில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிவார்ந்த தேசத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் அரசாங்கம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

முன்னோடித் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்படும் புதிய திட்டம் மக்களின் வாழ்க்கைமுறையை மேம்படுத்த இலக்குக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விளக்குக் கம்பத்தில் கேமராவும், முக அடையாளத் தொழில்நுட்பமும் இணைக்கப்படவிருப்பது பாதுகாப்பு நிபுணர்கள், உரிமைக் குழுக்கள் ஆகிய தரப்புகளிடையே அக்கறைகளை எழுப்பியுள்ளது.

திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ST Engineering நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. 

Top