Images
  • stacker video
    படம்: Nuria Ling

சமையலறையில் தொடங்கிய ஆர்வத்தை சாதனையாக்கிய மாணவர்

குவளைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிப் பின் கலைக்கும் (stacking cups) விளையாட்டுப் போட்டியில் 13 வயது ஷான் ஸ்வென்ட்டோ நிகழ்த்தியிருக்கும் சாதனைக்குச்  சமையலறையிலிருந்து தொடங்கிய ஆர்வமே காரணமாம்.

கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் சிறந்த விளையாட்டாளர் எனும் பெருமை அச்சிறுவனுக்குக் கிட்டியது.


11 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான போட்டியாளர்களைத்  தோற்கடித்து ஷான் வெற்றிபெற்றான்.

இந்தப் போட்டியில் 12 குவளைகளை குறைவான விநாடிகளில் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிப் பின் கலைக்கவேண்டும்.

9.268 விநாடிகளில் கவனம் சிதறாமல் அதைச் செய்து பார்ப்போரை மலைக்கவைத்தான் ஷான்.

Ellen DeGeneres Show என்னும் தொலைக்காட்சித் தொடரின்மூலம் அந்த விளையாட்டைப் பற்றி அறிந்துகொண்ட ஷானுக்கு அதில் அதீத ஆர்வமும் ஏற்பட்டது. சமையலறைக்குச் சென்று பிளாஸ்டிக் குவளைகளைக் கொண்டு அந்தப் போட்டியைத் தானாகவே கற்றுக்கொண்டான்.

அதன்பின்னர் போட்டிகளில் கலந்துகொள்ளத் தொடங்கி அதில் முத்திரை பதித்திருக்கிறான்.


Top