Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் அரியவகை ஆமைகளைக் கடத்தியதற்காக ஆடவருக்கு ஒரு மாதச் சிறை

சிங்கப்பூருக்குள் அரியவகை ஆமைகளைக் கடத்திய குற்றத்திற்காக 50 வயது ஆடவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்குள் அரியவகை ஆமைகளைக் கடத்திய குற்றத்திற்காக 50 வயது ஆடவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வழியாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி கலித் அவாத் பாமாதாஜ் என்றவர் 22 ஆமைகளைக் கடத்த முயற்சிசெய்தபோது கைதுசெய்யப்பட்டார்.

வாகனத்தின் பின்பகுதியில் மளிகைப் பொருட்களுடன் துணிப்பை ஒன்றில் ஆமைகள் வைக்கப்பட்டிருந்தன.

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் ஆகியவை இணைந்து அதன் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

இந்தியன் ஸ்டார் என்று வகைப்படுத்தப்படும் ஆமைகளைச் செல்லப் பிராணிகளாக வைத்துக்கொள்ள முடியாது.

அவற்றை இறக்குமதி செய்ய அனுமதி காலித்துக்கு இல்லை என்பது விசாரணைகளுக்குப் பிறகு தெரியவந்தது. ஆமைகளை காலித் செல்லப் பிராணிகளாக வைத்திருக்க திட்டமிட்டிருந்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்