Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Starfresh குடிநீர் போத்தல் மீட்பு

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Starfresh குடிநீர் போத்தல் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
Starfresh குடிநீர் போத்தல் மீட்பு

படம்: CNA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் Starfresh குடிநீர் போத்தல் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் நுண்ணுயிர்க் கிருமி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் உணவு ஆணையம் அதனை மீட்டுக்கொண்டது.

ஆணையம் நடத்திய சோதனையில் Pseudomonas aeruginosa என்னும் நுண்ணுயிர்க் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, Starfresh குடிநீர் போத்தல்களை சிங்கப்பூருக்குள் இறக்குமதி செய்யும் Radha Exports நிறுவனம் அவற்றை மீட்டுக்கொள்ளுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

Starfresh குடிநீரை வாங்கிய வாடிக்கையாளர்கள் அதனை அருந்தவேண்டாம் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேல் விவரங்கள் அறிய, அதனை வாங்கியுள்ள வாடிக்கையாளர்கள் Radha Exports நிறுவனத்தைத் தொடர்புக்கொள்ளலாம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்