Images
  • Starhub1
    படம்: Reuters

சட்டவிரோத ஒளிவழித் தெரிவுப் பெட்டிகளைப் பயன்படுத்துவோருக்கு StarHub நிறுவனம் புது அறிவிப்பு

StarHub நிறுவனம், திருடப்பட்ட படங்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பும் set-top box எனும் ஒளிவழித் தெரிவுப் பெட்டிகளைத் திருப்பித் தருவோருக்கு StarHub TV+ பெட்டிக்கான வாடகையை, ஈராண்டிற்குத் தள்ளுபடி செய்யும்.

அதுபோன்ற பெட்டிகளை விற்கும் நிறுவனங்களுக்கு, விரைவில் அபராதம் விதிக்கப்படலாம்.

அந்த விதி நடப்பிற்கு வரும்முன்னர், சட்டபூர்வமான வழிகளில் படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்ப்பதைத் தனது திட்டம் ஊக்குவிக்கும் என்று StarHub குறிப்பிட்டது.

Plaza Singapura, Tampines Mall, ஜூரோங் பாயின்டில் உள்ள StarHub கிளைகள் உள்ளிட்ட 8 கடைகளில், அடுத்த மாத இறுதிவரை, வாடிக்கையாளர்கள் பெட்டிகளை இலவசமாக, பாதுகாப்பாக விட்டுச் செல்லலாம்.

விட்டுச் செல்லப்படும் பெட்டிகள் ,பொறுப்பான, சுற்றுப்புறத்திற்கு உகந்த வழியில் அப்புறப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, மின்கழிவு மறுபயனீட்டு நிறுவனம் ஒன்றுடன் StarHub இணைந்துள்ளது.

Top