Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மோட்டார் சைக்கிளோட்டியைப் பேருந்தால் மோதிய சிங்கப்பூர் சிறைச் சேவை ஓட்டுநர் தற்காலிகப் பணிநீக்கம்

மோட்டார் சைக்கிளோட்டியைப் பேருந்தால் மோதிய சிங்கப்பூர் சிறைச் சேவை ஓட்டுநர் தற்காலிகப் பணிநீக்கம்

வாசிப்புநேரம் -

அரசு நீதிமன்றத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதியதையடுத்து, தனது பேருந்து ஓட்டுநர் ஒருவரை அந்தப் பணியிலிருந்து தற்காலிகமாய் நீக்கியுள்ளதாக சிங்கப்பூர் சிறைச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில், போக்குவரத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்ற மாதம் 24ஆம் தேதி, அரசு நீதிமன்ற வளாகத்தினுள் அமைந்திருக்கும் வாகனப் பாதையில் அந்தச் சம்பவம் நடந்தது.

பாதைக்குள் நுழையும் வழிக்குப் பதிலாக, வெளியேறும் வழி வாயிலாக ஓட்டுநர் பேருந்தைச் செலுத்தினார்.

அதேநேரத்தில் நிலத்தடி வாகன நிறுத்துமிடத்திலிருந்து அந்தப் பாதையில் மோட்டார் சைக்கிளோட்டி வந்ததாகக் கூறப்பட்டது.

இருவருமே உடனடியாக வாகனங்களை நிறுத்த முடியாமற்போனதால், மோதலைத் தவிர்க்க இயலவில்லை என்று சிறைச் சேவைப் பிரிவும், அரசு நீதிமன்றங்களும் கூறின.

சம்பவத்துக்குப் பிறகு மோட்டார் சைக்கிளை ஓட்டிய 31 வயதுப் பெண், சுய நினைவோடு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
சம்பவம் குறித்த காவல்துறை விசாரணை தொடர்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்