Images
  • state times refused to take out
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அவதூறான கட்டுரையை அகற்ற மறுத்த States Times Review இணையத்தளத்துக்குத் தடை

சிங்கப்பூரில் இணையச் சேவை நிறுவனங்கள், தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட States Times Review செய்தி இணையத்தளத்துக்கான அனுமதியை மறுத்துள்ளன.

மலேசியாவின் 1MDB நிதி மோசடிக்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும் தொடர்பு இருப்பதாக அந்த இணையத்தளம் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கட்டுரையை அகற்றும்படி கேட்டுக்கொண்டது கோரிக்கைக்கும் அது இணங்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, அந்த இணையத்தளத்துக்கான அனுமதியை மறுப்பதற்கு, தகவல், ஊடக மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

நேற்று இரவிலிருந்து அந்த இணையப்பக்கத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

நீங்கள் பயன்படுத்த முயற்சி செய்யும் இணையத்தளத்தில் தடைசெய்யப்பட்ட கருப்பொருள் இருப்பதால் அதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது

என்று இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தது.அந்த இணையத்தளம் அதன் Facebook பக்கத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் கட்டுரையை அகற்றப்போவதில்லை என்று கூறியது.

அந்த இணையத்தளத்தின் செயல்பாடுகளை நிறுத்தவிருப்பதாகப் பின்னர்  அதனை நிறுவிய திரு. அலேக்ஸ் டான் தகவல் அளித்தார்.

States Times Reviewஇன் Facebook பக்கத்தின் செயல்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களில் நிறுத்தப்படும் என்றார் அவர்.

States Times Review இணையத்தளம், அடுத்த பொதுத் தேர்தல் வரை அதன் செயல்பாடுகளைத் தொடரும் என்றும் திரு.டான் கூறினார்.

தமது சொந்த விருப்பத்திலேயே செயல்பாடுகளை நிறுத்தவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Top