Images
  • khaw-1
    படம்: Jeremy Long

சிங்கப்பூரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் - அமைச்சர் காவ்

சிங்கப்பூர் நீர்ப் பகுதியில் நிகழ்ந்த அண்மைய ஊடுருவல் சம்பவங்களைத் தொடர்ந்து சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கேட்டுக்கொண்டுள்ளார்.

அது தேசிய நலன் சார்ந்த விவகாரம் என்றும் அவர் கூறினார்.

தேசிய நலன்களுக்கு மிரட்டல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள அனைவரும் அமைதியாக ஆனால் உறுதியாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்

என்றார் திரு. காவ்.

கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி, மலேசியா ஒருதலைப்பட்சமாக ஜொகூர் துறைமுக எல்லைகளில் மாற்றங்களை அறிவித்திருந்தது. மலேசிய மத்திய அரசாங்கத்தின் அரசிதழிலும் அது வெளியிடப்பட்டது.

அதன்பிறகு,  கடந்த இரு வாரங்களில், துவாஸுக்கு அருகே 14 முறை ஊடுருவல் நிகழ்ந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அதற்கு 3 முறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது.


Top