Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

SingapoRediscovers பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் முறையை மாற்றத் திட்டம் இல்லை: சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம்

SingapoRediscovers  பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் முறையை மாற்றத் திட்டம் ஏதுமில்லை என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
SingapoRediscovers பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் முறையை மாற்றத் திட்டம் இல்லை: சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம்

(படம்:Singapore Tourism Board)

SingapoRediscovers பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தும் முறையை மாற்றத் திட்டம் ஏதுமில்லை என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

தற்போது இன்னும் கூடுதலான சிங்கப்பூரர்கள் தங்களது பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த ஊக்குவிப்பதற்கு விளம்பர முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு செப்டம்பரில், 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும், 100 வெள்ளி மதிப்புள்ள பயணச் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம் 28ஆம் தேதி நிலவரப்படி, சுமார் முக்கால்வாசி சிங்கப்பூரர்கள் அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பற்றுச்சீட்டுகள் ஜூன் மாத இறுதியில் காலாவதியாகும்.

பற்றுச்சீட்டுகளை மின்னிலக்க முறையில் மட்டுமே மீட்டுக்கொள்ள திட்டம் வடிவமைக்கப்பட்டது என்றும்
அதை மாற்ற எண்ணமில்லை என்றும் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் கூறியுள்ளார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்