Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரவில் வீடுபுகுந்து திருட முயன்ற இளையர்கள் கைது

இரவு வேளையில் இக்குற்றங்களைப் புரிய முயன்ற இளையர்கள், 17லிருந்து 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வாசிப்புநேரம் -

வீடுபுகுந்து திருட முயன்ற மூன்று இளையர்கள் கைது செய்யப்பட்டதாக இன்று காவல்துறை தெரிவித்தது.

இரவு வேளையில் இக்குற்றங்களைப் புரிய முயன்ற இளையர்கள்,
17லிருந்து 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் நகைக்கடை ஒன்றின் சுருள் கதவுகள், தீயிட்டு எரிக்கப்பட்டதற்கான அடையாளங்களோடு சேதமடைந்து காணப்பட்டன.

மேலும், எரிபொருள் தொட்டிகள், Blowtorch எனப்படும் தீயுமிழ் கருவி, கையுறைகள், முகமூடி போன்ற பொருட்கள் சம்பவ இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காவல்துறைக்குப் புகார் செய்யப்பட்டது.

நகைக்கடை, துணிக்கடை என்று மேலும் இரு இடங்களில் அதே மாதிரி அடையாளங்கள் காணப்பட்டதாகக் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

ஜலபாங், பூன் லே, சர்க்கிட் சாலைகளில் சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் முடிவடைந்த தேடலுக்குப் பிறகு மூன்று இளையர்களைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இரவு நேரத்தில் வீடுபுகுந்து திருடியதாக, மூவர் மீதும் நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்