Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

FairPrice பேரங்காடியிலிருந்து காணாமற்போன தள்ளுவண்டிகள் - காவல்துறையினர் விசாரணை

ஹாலந்து டிரைவில் அமைந்துள்ள NTUC FairPrice பேரங்காடியின் அனைத்துத் தள்ளுவண்டிகளும் காணாமற்போனது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
FairPrice பேரங்காடியிலிருந்து காணாமற்போன தள்ளுவண்டிகள் - காவல்துறையினர் விசாரணை

படம்: Reddit/Reddit-Loves-Me

ஹாலந்து டிரைவில் அமைந்துள்ள NTUC FairPrice பேரங்காடியின் அனைத்துத் தள்ளுவண்டிகளும் காணாமற்போனது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புளோக் 36 ஹாலந்து டிரைவில் அமைந்துள்ள கடையிலிருந்து தள்ளுவண்டிகள் காணாமற்போனதாகக் காவல்துறையினருக்கு வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் விசாரணையை முடிக்கும் வரை, அந்த விவகாரம் குறித்து மேலும் கருத்துரைக்க இயலாது என்று FairPrice-இன் பேச்சாளர் தெரிவித்தார்.

தள்ளுவண்டிகள் காணாமற்போனது குறித்து Fairprice தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்திருந்த அறிக்கை ஒன்றின் நிழற்படம்  இணையத்தில் பரவியது.

அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் அண்மை அறிக்கை வெளியாகியுள்ளது.

தள்ளுவண்டிகள் காணாமல் போவதைத் தடுக்க, 2016ஆம் ஆண்டில், FairPrice தள்ளுவண்டி அமலாக்கத் திட்டத்தை அறிமுகம் செய்தது. முறையான பயன்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துக்கூறுவது அதன் நோக்கம்.

2015ஆம் ஆண்டில், FairPrice சுமார் 1,000 தள்ளுவண்டிகளை இழந்தது. அதன் காரணமாக நிறுவனம் 150,000 வெள்ளிக்கு மேல் செலவிட நேரிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்