Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அடுத்த மாதம் முதல் 270 கடைகளில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா

அடுத்த மாதம் முதல் தேதி தொடக்கம், 270-க்கும் அதிகமான உணவு, பானக் கடைகளில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்பட மாட்டா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அடுத்த மாதம் முதல் 270 கடைகளில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா

படம்: Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அடுத்த மாதம் முதல் தேதி தொடக்கம், 270-க்கும் அதிகமான உணவு, பானக் கடைகளில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்பட மாட்டா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உறிஞ்சு குழல் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அல்லது குறிப்பிட்ட மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே அவை வழங்கப்படும் என்று WWF எனும் சிங்கப்பூர் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் தெரிவித்தது.

பிரபல ஹோட்டல்களான Raffles, Swissotel, Fairmont  போன்ற இடங்களில் செயல்படும் உணவகங்களில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் வழங்கப்படமாட்டா.

நாள் ஒன்றுக்கு 2.2 மில்லியன் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களை சிங்கப்பூரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்று  சென்ற ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்