Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பக்கவாதம் மீண்டும் ஏற்படும் முன்னர் அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் சாதனம்

தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம் முதன்முறையாக ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் (atrial fibrillatio) எனும் இதயத் துடிப்புக் குறைபாடு தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பக்கவாதம் மீண்டும் ஏற்படும் முன்னர் அதற்கான காரணத்தைக் கண்டறிய உதவும் சாதனம்

(படம்: CNA)


தேசியப் பல்கலைக்கழக சுகாதாரக் குழுமம் முதன்முறையாக ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் (atrial fibrillatio) எனும் இதயத் துடிப்புக் குறைபாடு தொடர்பான ஆய்வை மேற்கொண்டுள்ளது.

அந்தக் குறைபாடு பக்கவாதம் ஏற்படுவதற்கு மூலகாரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆள்காட்டி விரல் அளவிலான ஒரு சாதனத்தைக் கொண்டு, பக்கவாதம் மீண்டும் ஏற்படும் முன்னர் அதற்கான காரணத்தைக் கண்டறிய முடியும் என ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் எனும் குறைபாடு சுமார் 50,000 சிங்கப்பூரர்களுக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.

அந்தக் குறைபாடு உள்ள 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எந்தவோர் அறிகுறியும் இருப்பதில்லை.

2015ஆம் ஆண்டு முதல், பக்கவாதம் உள்ள 205 பேர் 'insertable cardiac monitor' எனும் சாதனத்தை நெஞ்சின் அடியில் உள்ள தோலில் பொருத்தி உள்ளனர்.

37 பேருக்கு ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் எனும் குறைபாடு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தச் சாதனம் சீரற்ற இதயத்துடிப்பைக் கண்டறிந்து மருத்துவருக்குத் தகவல் அனுப்ப உதவுகிறது.

அதன் மூலம் பக்கவாதம் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கமுடியும்.

இவ்வாண்டு டிசம்பர் மாதம் முதல், அந்தத் திட்டம் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு நீட்டிக்கப்படும்.

புக்கிட் பாத்தோக் பலதுறை மருந்தகத்தில் உள்ள (ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன் மருந்தகத்தின் இயங்கும் நேரமும் நீட்டிக்கப்படும்.

அது தாதியர்களால் வழிநடத்தப்படும்.

அதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனைகளை நோயாளிகள் பெறலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்