Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனப் பயணிகளிடையே சிங்கப்பூரைப் பிரபலப்படுத்த அலிபாபா குழுமத்துடன் இணையும் பயணத்துறைக் கழகம்

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், சீனப் பயணிகளிடையே சிங்கப்பூரைப் பிரபலப்படுத்த அலிபாபா குழுமத்துடன் மூவாண்டு இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
சீனப் பயணிகளிடையே சிங்கப்பூரைப் பிரபலப்படுத்த அலிபாபா குழுமத்துடன் இணையும் பயணத்துறைக் கழகம்

படம்: Jeremy Long

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், சீனப் பயணிகளிடையே சிங்கப்பூரைப் பிரபலப்படுத்த அலிபாபா குழுமத்துடன் மூவாண்டு இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளது.

மேலும் அதிகமான சீனப் பயணிகளை இங்கு ஈர்க்கவும் அவர்களை இங்கு கூடுதலாகச் செலவு செய்யத் தூண்டவும் இருதரப்பும் இணைந்து செயல்படும்.

அவர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துவது முக்கிய இலக்கு என்று கூறப்பட்டது.

அதன் தொடக்கமாக இவ்வாண்டின் பிற்பாதியில் "Passion Made Possible Privileges" எனும் இயக்கம் ஆரம்பிக்கப்படும்.

பயணிகள் இங்கு வருவதற்கு முன் சிங்கப்பூரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வது முதல் இங்கிருந்து திரும்பிச் சென்ற பிறகும் அவர்களை சிங்கப்பூரின் ரசிகர்களாகவும் நண்பர்களாகவும் வைத்திருப்பது வரை அந்த இயக்கம் கவனம் செலுத்தும்.

சிங்கப்பூரில் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த பயணத்துறைக் கழகம் எப்போதுமே முன்னணித் தொழில்துறைப் பங்காளிகளை நாடுவதாகக் கழகத்தின் தலைமை நிர்வாகி கீத் டான் தெரிவித்தார்.

அலிபாபா குழுமத்துடனான பங்காளித்துவம் சிங்கப்பூருக்கு அதிக நன்மையளிக்கும் என்றார் அவர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்