Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பள்ளி மாணவர்கள் 4 பேருக்கும் ஓர் ஆசிரியருக்கும் COVID-19 நோய்த்தொற்று

சிங்கப்பூரில் நேற்று COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 4 பள்ளி மாணவர்களும் ஓர் ஆசிரியரும் அடங்குவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 4 பள்ளி மாணவர்களும் ஓர் ஆசிரியரும் அடங்குவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்று உறுதியான மாணவர்கள் Bedok View உயர்நிலைப் பள்ளி, East Spring தொடக்கப் பள்ளி,
Jurong West தொடக்கப் பள்ளி, Jurong West உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.

ஆசிரியர் Assumption Pathway பள்ளியைச் சேர்ந்தவர்.

மாணவர்கள் வீட்டில் இருப்போருக்குக் கிருமித்தொற்று முன்னர் உறுதிசெய்யப்பட்டதால், ஏற்கனவே அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியது.

சென்ற வாரம் பள்ளி சென்றபோது அவர்கள் நலமாக இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.

ஆசிரியருக்கு எப்போது நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

Bedok View உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர் ஜூன் 30க்குப் பிறகு பள்ளி செல்லாததால், மற்ற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற பள்ளிகள் ஒவ்வொன்றிலும் சுமார் 60 மாணவர்களுக்கும், 10 ஊழியர்களுக்கும் 14 நாள்கள் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாகவும், தற்போது பாதிக்கப்பட்ட பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்