Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் சிங்கப்பூர் உதவும்

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்கும் பணியில் உதவ சிங்கப்பூரின் MV Swift Rescue கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்தோனேசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் சிங்கப்பூர் உதவும்

(படம்: Koh Mui Fong/TODAY)

இந்தோனேசியாவில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி மீட்கும் பணியில் உதவ சிங்கப்பூரின் MV Swift Rescue கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (Ng Eng Hen) தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியக் கடற்படை உதவி கோரியதைத் தொடர்ந்து நேற்றுப் பிற்பகல் அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கப்பலில், மருத்துவக் குழுவினரும் இருப்பதாக அவர் சொன்னார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவின் முக்கியத்துவத்தைச் சுட்டிய டாக்டர் இங், தேடல் பணிகளில் இந்தோனேசியாவுக்கு உதவ சிங்கப்பூர் தன்னால் ஆன அனைத்தையும் செய்வது இயல்பானதே என்றார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்