Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் கடற்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்

சிங்கப்பூர்க் கப்பற்படைக்காக ஜெர்மனியில் இருந்து வாங்கப்படும் நான்கு நீர்முழ்கிக் கப்பல்களில் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் கடற்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்

(படம்: Jeremy Koh)

சிங்கப்பூர்க் கடற்படைக்காக வாங்கப்படும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஜெர்மனியின் கீல் நகரில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

70 மீட்டர் நீளங்கொண்ட அந்தக் கப்பலுக்கு "Invincible" என்று பெயரிடப்பட்டுள்ளது.

218SG ரகத்தைச் சேர்ந்த அந்த நீர்மூழ்கியைப் போல் மொத்தம் 4 கப்பல்களை சிங்கப்பூர் வாங்குகிறது.

சிங்கப்பூர் எதிர்நோக்கும் கடல்சார் பாதுகாப்புச் சவால்களைச் சமாளிக்க அவை உதவும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹெங் கூறினார்.

"Invincible" அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய கப்பல்கள் சிங்கப்பூருக்கும், ஜெர்மனிக்கும் இடையிலான தற்காப்பு நல்லுறவுக்கு நல்ல சான்று என்று குறிப்பிட்டார்.

பல்வேறு சோதனைப் பயிற்சிகளுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு "Invincible" சிங்கப்பூருக்கு வந்துசேரும்.

எஞ்சிய 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டுவருகின்றன. அவற்றுக்கு Impeccable, Illustrious, Inimitable எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்