Images
  • Singapore

சிறந்த நாடாக வடகொரியா உருவெடுக்க வாய்ப்புள்ளது: டிரம்ப்

வடகொரியா, ஒரு சிறந்த நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, வர்த்தக வாய்ப்புகளை அரவணைக்கும் போக்கை பியோங்யாங் பின்பற்றினால், அந்நாடு எல்லையற்ற சாதனைகளைப் புரியும் ஆற்றல் கொண்டதாக விளங்கும் என்றார் அவர்.

வரலாற்றுச் சிறப்புவாய்ந்த டிரம்ப்-கிம் சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு. டிரம்ப் அதனை தெரிவித்தார்.


Top