Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சுங்கை காடுட் அறைகலன் கிடங்கில் தீ

சுங்கை காடுட்டிலிருக்கும் (Sungei Kadut) அறைகலன் கிடங்கில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை தீப்பற்றியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சுங்கை காடுட் அறைகலன் கிடங்கில் தீ

படங்கள்:Facebook/Singapore Civil Defence Force

சுங்கை காடுட்டிலிருக்கும் (Sungei Kadut) அறைகலன் கிடங்கில் இன்று (டிசம்பர் 16) அதிகாலை தீப்பற்றியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

அதிகாலை 3 மணி அளவில் அந்தக் கிடங்கில் தீப்பற்றிய தகவல் கிடைத்ததாக அது கூறியது.

சம்பவ இடமான 31, சுங்கை காடுட் ஸ்ட்ரீட் 2-க்கு 25 அவசர வண்டிகளோடு சுமார் 90 தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

12 குழாய்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்து 4 மணி நேரம் போராடி தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

அருகிலிருந்த கட்டடங்களுக்குத் தீ பரவவில்லை.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீச் சம்பவத்திற்கான காரணத்தை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்