Images
  • sungei kadut murder (2)
    (படம்: Raj Nadarajan/TODAY)

சுங்கை காடுட் கொலை - 22 வயது இளையர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


சுங்கை காடுட்டில் ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 22 வயது இளையர், மருத்துவமனையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

யி ஜிங் மான் (Yee Jing Man) என்ற மலேசிய நாட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

சுங்கை காடுட் லூப்பில் உள்ள கட்டடம் ஒன்றின் இரண்டாம் தளத்தில், நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் கொலைச் சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் லின் சின்ஜிய (Lin Xinjie) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிற்பகல் 12.57 மணிக்கு உதவி கேட்டு காவல்துறைக்கு அழைப்பு வந்தது.

சம்பவ இடத்தில் 30 வயது ஆடவர், அசைவில்லாமல் காணப்பட்டார். அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்தனர்.

மற்றொருவர் காயமுற்றுக் கிடந்தார். 29 வயதான அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அந்த இருவருமே யிக்குத் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

வழக்கு மீண்டும் இம்மாதம் 20ஆம் தேதி தொடரும். 

Top