Images
  • Sunseap
    ( படம்: Sunseap )

கடலில் மிதக்கும் எரிசக்தி நிலையம்

நீடித்த எரிசக்தியை வழங்கும் நிறுவனமான Sunseap, சிங்கப்பூருக்கு அப்பால் கடலில் மிதக்கும் எரிசக்தி நிலையத்தை நிர்மாணித்து வருகிறது.

Photovoltaic எனும் சூரிய சக்தித் தகடுகளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அது வடக்கு உட்லண்ட்ஸின் நீர்முகப்புப் பூங்காவில் அமைந்துள்ளது.

அதன் பரப்பளவு, 5 ஹெக்டேர்.

பூங்கா, ஜொகூர் நீரிணையின் ஓரமாக அமைந்துள்ளது.

கட்டிமுடிக்கப்பட்ட பிறகு ஆண்டுதோறும் நிலையம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சுமார் 6,400 மெகாவாட் மணி மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

அந்த மின்சாரம், நான்கு அறைகளைக் கொண்ட சுமார் 1,250 வீடுகளுக்குப் போதுமானது.

மேலும் அதன் மூலம், அடுத்த சுமார் 25 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் சுமார் 2,600 டன் கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்க முடியும் என்று Sunseap தெரிவித்தது.

அந்நிறுவனம் இதற்கு முன் தெங்கா (Tengah )நீர்த்தேக்கத்தில் உலகின் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி முறையைச் சோதித்தது.

பொதுவாக கட்டடக் கூரைகளின் மேல் பொருத்தப்படும் சூரிய சக்திப் பலகைகளைக் காட்டிலும், நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் மிதக்கவிடப்படும் பலகைகள் மேம்பட்ட வகையில் செயல்படுகின்றன.

குளிர்ச்சியான சூழல் அதற்கான காரணம்.  

Top