Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பதிவுசெய்யப்படாத தனிநபர் நடமாட்டச் சாதன மின்னூட்டக் கருவிகளுக்கு 'பாதுகாப்புத்' தர ஒட்டுவில்லை ஒட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் பதிவுசெய்யப்படாத கருவிகளுக்குப் 'பாதுகாப்புத்' தர ஒட்டுவில்லையை ஒட்டியதற்காக iPassion குழுமத்திற்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பதிவுசெய்யப்படாத தனிநபர் நடமாட்டச் சாதன மின்னூட்டக் கருவிகளுக்கு 'பாதுகாப்புத்' தர ஒட்டுவில்லை ஒட்டிய நிறுவனத்துக்கு அபராதம்

படம்: Enterprise Singapore

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கு மின்னூட்டம் செய்யும் பதிவுசெய்யப்படாத கருவிகளுக்குப் 'பாதுகாப்புத்' தர ஒட்டுவில்லையை ஒட்டியதற்காக iPassion குழுமத்திற்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளைத் தொடர்ந்து 900க்கும் மேலான கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

90 விழுக்காட்டுக்கும் மேலான கருவிகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

XVE-4200200, XVE-5460200, XVE-3740300 and XVE-29402002 ரகத்தைச் சேர்ந்த அக்கருவிகளின் விநியோகத்தை நிறுத்தும்படி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 மார்ச் 31க்கும் 2016 மே 24க்கும் இடைப்பட்ட காலத்தில் விநியோகம் செய்யப்பட்ட அக்கருவிகளை வைத்திருக்கும் பயனீட்டாளர்கள் அவற்றைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பயனீட்டாளர் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறிய 15 குற்றச்சாட்டுகளை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

2016 ஏப்ரலில் பயனீட்டாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிறுவனத்தின்மீது விசாரணை தொடங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட கருவிகளுக்கும் இதுவரை நேர்ந்துள்ள தனிநபர் நடமாட்டச் சாதன தீவிபத்துகளுக்கும் இடையே தொடர்புள்ளதா என்பதுகுறித்துத் தெளிவான தகவல் ஏதும் இல்லை.

பதிவுசெய்யப்படாத பொருள்களை விற்பவர்களுக்கு ஈராண்டுச் சிறைத்தண்டனையோ 10,000 வெள்ளி வரை அபராதமோ விதிக்கப்படலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்