Images
  • sg company
    (படம்:Ooi Boon Keong/TODAY)

ஜூன் 21 முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் நிறுவனங்களுக்கு மாத இறுதிவரை 10% சம்பள ஆதரவு


இம்மாதம் 20ஆம் தேதிவரை செயல்பட அனுமதியில்லாத நிறுவனங்களுக்கு, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உள்ளூர் ஊழியர்களுக்கான சம்பளச் சலுகைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 21ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் நிறுவனங்கள், ஊழியர்களுக்கான 10 விழுக்காட்டுச் சம்பள ஆதரவை மாத இறுதிவரை பெறவுள்ளன.

உணவு, பானக் கடைகள், நேரடி நிகழ்ச்சிகள், முகக்கவசம் அணியத் தேவையில்லாத விளையாட்டு-உடற்பயிற்சி நடவடிக்கைகள், துணைப்பாட-இணைப்பாட வகுப்புகள் போன்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றில் அடங்கும்.


டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான கோவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.

அடுத்த இரண்டு மாதங்களுக்கு, ஒரு வாகனத்துக்கான ஆதரவுத் தொகையாக மாதந்தோறும் 300 வெள்ளியை ஓட்டுநர்கள் பெறவுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 150 வெள்ளியை அவர்கள் பெறுவர்.

Top