Images
  • cleaning

நோய்வாய்ப்பட்டவர்களின் இருப்பிடங்களில் கிருமிகள் தொடர்ந்து இருக்கின்றன : தேசியச் சுற்றுப்புற அமைப்பு

நோய்வாய்ப்பட்டவர்களின் இருப்பிடங்களில் கிருமிகள் தொடர்ந்து இருப்பதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அடிக்கடி நம் கைபடும் இடங்களைக் கிருமிநீக்கம் செய்வதன் முக்கியத்துவத்தை ஆய்வு வலியுறுத்துகிறது.

COVID-19 நோய்த்தொற்று உள்ள 400 பேரின் இருப்பிடங்களில் அதிகம் அவர்கள் கையால் தொட்ட இடங்களிலிருந்து மாதிரிகள் ஆய்வில் எடுக்கப்பட்டன. அறைகள், கழிப்பறைகள், மின்தூக்கிகள் போன்றவை அவ்விடங்களில் அடங்கும்.

சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கிருமிகள் மூன்று நாள் வரையில் உயிர்வாழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் நம் கை அதிகம் படும் இடங்களை அடிக்கடிச் சுத்தம்செய்வது முக்கியம் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

கிருமிநாசினிகளைத் தெளிப்பது மட்டுமின்றி அவ்விடங்களைத் துடைத்துச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

புகை, புறஊதாக் கதிர்களைக்கொண்டு கிருமிநீக்கம் செய்வது மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்களில் மட்டுமே அதிகப் பலனளிப்பதாகக் கூறப்பட்டது. அதுவும் அந்தப் பணிகள் பயிற்சிபெற்ற நிபுணர்களால் செய்யப்படவேண்டியவை என்று தெரிவிக்கப்பட்டது.

சரிவரச் சுத்தம் செய்வதுகுறித்துப் பொதுமக்களுக்கும் துப்புரவாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில் சுத்தம் செய்யும் முறைகள், கிருமிநாசினிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது போன்றவைகுறித்து தேசியச் சுற்றுப்புற அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது.

Top