Images
  • scam
    படம்: சிங்கப்பூர்க் காவல்துறை 

மோசடிக் குற்றங்கள் கடந்த ஆண்டு 20 விழுக்காடு உயர்வு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உயர்ந்திருந்தது.

காவல்துறை அதனைத் தெரிவித்தது.

பதிவான குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு, அதற்கு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1.4 விழுக்காடு அதிகம்.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் 33,130 ஆகப் பதிவானது.

இணைய வர்த்தகம், கடன், பாலியல் சேவைகள் போன்றவை தொடர்பான மோசடிகள் தொடர்ந்து அக்கறைக்குரியவையாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

அத்தகைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 5,800ஆக இருந்தது.

அதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது சுமார் 20 விழுக்காடு அதிகம்.


Top