Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையைத் தத்தெடுக்க ஓரின உறவு ஆடவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்ட தனது 4 வயது மகனைத் தத்தெடுக்க ஓரின மருத்துவருக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையைத் தத்தெடுக்க ஓரின உறவு ஆடவருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

படம்: Unsplash/Liane Metzler

வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்ட தனது 4 வயது மகனைத் தத்தெடுக்க ஓரின மருத்துவருக்கு சிங்கப்பூர் உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அவரது குழந்தை அமெரிக்காவில் பிறந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்புதலை இன்று (டிசம்பர் 17) மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது.

குழந்தையின் நலன் கருதி அந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்டதாக 3 நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்தது.

இதற்கு முன்னதாக, சொந்தக் குழந்தையை முறையாகத் தத்தெடுப்பதற்கு அவர் செய்திருந்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. 

குழந்தை தத்தெடுக்கப்படுவதை அனுமதிப்பது, ஓரினக் குடும்பங்களின் உருவாக்கத்தை ஊக்குவிப்பதாகப் பொருள்படாது என்று நீதிபதிகள் கூறினர்.

ஓரின உறவுக் குடும்பம் உருவாவதை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கை மீறப்படுவது குறித்த அக்கறையைக் காட்டிலும் குழந்தையின் நலனைப் பாதுகாக்க வேண்டியதே அதிக அவசியம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

குழந்தை சிங்கப்பூர்க் குடியுரிமை பெறும் வாய்ப்பைத் தத்தெடுப்பு உத்தரவு அதிகரிப்பதோடு சிங்கப்பூரில் நீண்ட காலத்திற்கு இருக்கும் சாத்தியத்தையும் அது வழங்கும் என்று நீதிபதிகள் குழு தெரிவித்தது.

குழந்தையின் நலன், பாதுகாப்பு, நீண்டகாலப் பராமரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அண்மைத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிபதிகள் குழு குறிப்பிட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்