Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவு உற்பத்தியை அதிகரிக்கும் உள்ளூர் இந்திய நிறுவனங்கள்: 'இத்துறையில் பணிபுரிய சிங்கப்பூரர்கள் தயங்காமல் முன்வர வேண்டும்' (பாகம் 2)

சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் அதன் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதற்குக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் அதன் உணவுத் தேவையில் 30 விழுக்காட்டை உள்ளூரிலேயே உற்பத்தி செய்வதற்குக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.

COVID-19 கிருமிப் பரவல் சூழலால் பல நாடுகள் முடங்கியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வரவேண்டிய உணவுப் பொருள்கள் வந்து சேரவில்லை.

சில உணவுப் பொருள்களின் விநியோகம் தடைபட்டது. சில பொருள்கள் தாமதமாக வந்துசேருகின்றன.

உலக வெப்பமயம் வேறு, எதிர்காலத்தில் உணவு தானிய உற்பத்தியைக் கடுமையாக பாதிக்கக் கூடுமென ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில், உள்ளூரிலேயே உணவை உற்பத்தி செய்வதற்கான முக்கியத்துவத்தை நன்கு உணர்த்தியுள்ளது தற்போதைய சூழல்.

விநியோகத் தொடர்ச்சி அறுபடாமல் இருக்க, ஏற்கெனவே நமது உணவுப்பொருள் இறக்குமதியைப் பன்முனைப்படுத்தி வருகிறது அரசாங்கம்.

அண்மைக் காலமாக அந்த முயற்சி இன்னும் தீவிரமடைந்திருக்கிறது.

உணவுப் பொருள்களில் மேம்பட்ட தன்னிறைவை எட்டுவதுகுறித்து, சிங்கப்பூரில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களிடம் விவரங்களை அறிந்துவந்தது 'செய்தி'.

இதில் இருக்கும் சவால்கள்?

இந்த வேலைக்கு உடல் உழைப்பு அதிகம் தேவைப்படுவதால், சிங்கப்பூரர்களை ஈர்ப்பதில் சிரமத்தை எதிர்நோக்குகிறோம். வெளிநாட்டு ஊழியர்களையே நாங்கள் பெரிதும் சார்ந்துள்ளோம். பல நாடுகளில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலையால் வெளிநாட்டு ஊழியர்கள் கிடைப்பதிலும் சிக்கல். உணவு உற்பத்தி துறையில் சிங்கப்பூரர்கள் தயக்கம் காட்டாமல் முன்வந்தால் நன்றாக இருக்கும்.

உற்பத்தியை அதிகரிக்க?

2030ஆம் ஆண்டிற்குள் உற்பத்தியை மூன்று மடங்கு உயர்த்த எண்ணியுள்ளோம். அதற்குத் தானியக்க முறைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

அரசாங்கம் உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கான வாடகையைக் குறைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று திரு. சாகுல் ஹமீது தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்