Images
  • swim pool
    (படம்: Facebook/ActiveSG)

காலாங் பேசின் நீச்சல் குளத்தில் மூழ்கிய 6 வயது சிறுமி மரணம்

காலாங் பேசின் நீச்சல் வளாகத்தில் மூழ்கிய 6-வயதுச் சிறுமி, மூன்று-வார சிகிச்சைக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் மாண்டார்.

சென்ற மாதம் 20ஆம் தேதி இரவு ஏழேகால் மணியளவில் சிறுமி மூழ்கியது குறித்த தகவல் கிடைத்ததாய் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சிறுமி K K மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் மாண்டதாகவும் சேனல் நியூஸ்ஏஷியா அறிகிறது.

சிறுமி நீச்சல் வகுப்பின்போது சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதாக Sport Singapore அமைப்பு தெரிவித்தது.

சிறுமியின் நீச்சல் பயிற்றுவிப்பாளர் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

பொது நீச்சல் குளங்களில் பயிற்றுவிப்பதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Top