Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீபாவளி வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளதாகக் கூறும் தையல்காரர்கள்

தீபாவளி வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளதாகக் கூறும் தையல்காரர்கள்

வாசிப்புநேரம் -

தீபாவளிக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ளன...

கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க வியாபாரம் மிகவும் மந்தமடைந்துள்ளதாகத் தையல்காரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

வியாபாரம் 50 விழுக்காடு வரை குறைந்துள்ளதாகத் தையல்காரர் திரு. ரவி சொன்னார்.

முன்பு எல்லாம், ஒரு மாதத்துக்கு முன்பே முன்பதிவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவேன். வியாபாரம் அலைமோதும் நிலை...இருப்பினும் இவ்வாண்டு, கடந்த வாரம் யாருமில்லை. இவ்வாரம், வியாபாரம் சற்று அதிகரித்துள்ளது,

என்று அவர் கூறினார்.

வியாபாரம் குறைவதற்கு வாடிக்கையாளர்கள் இணைய வர்த்தகத் தளங்களுக்கு மாறியுள்ளதே காரணம் என்று சிலர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு முன்பதிவுகள் சரிந்துள்ளன. வாடிக்கையாளர்கள் இணையம்வழி வாங்கிவிடுகின்றனர். அதனால் சேலை ரவிக்கைகளுக்கான முன்பதிவுகள் ஏதுமில்லை

என்றார் திரு. ரா.குமார்.

இருப்பினும், எப்படியோ, ஆடைகளை மாற்றியமைக்கும் சேவைகளில் லாபம் பார்க்கமுடிகிறது என்று அவர் சொன்னார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்