Images
  • TUAS
    (படம்:Elizabeth Khor)

சிங்கப்பூரின் நில-வழி சோதனைச் சாவடிகளில் தைவானியத் துணைக் காவற்படை அதிகாரிகள்

சிங்கப்பூரின் நில-வழி சோதனைச் சாவடிகளில் தைவானியத் துணைக் காவற்படை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று உள்துறை அமைச்சர் கா சண்முகம் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் அதிகாரிகளுடன் இணைந்து அவர்கள் பணியில் ஈடுபடுவர்.

வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் டேயின் நாடாளுமன்றக் கேள்விக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

சிங்கப்பூர் துணைக் காவற்படை அதிகாரிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லையென்று அமைச்சர் கூறினார்.

அடுத்த சில ஆண்டுகளின் தேவையைச் சமாளிக்க அது போதாது.

இதற்கு முன்னர், குடியரசின் நில-வழி சோதனைச்சாவடிகளில் சிங்கப்பூர் அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடமுடியும்.  

Top