Images
  • taj
    படம்: Unsplash/Asiya Kiev

29 பேர் நோய்வாய்ப்பட்டதில் Taj Catering நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Taj Catering நிறுவனத்தின் உணவை உட்கொண்டவர்களில் 29 பேர் gastroenteritis எனும் வயிற்றுக் கோளாற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளது.

அதில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இம்மாதம் 2ஆம் தேதி, அந்த நிறுவனம் தயாரித்த உணவை உட்கொண்டார்.

அவர் தற்போது குணமடைந்து விட்டதாக சுகாதார அமைச்சும் சிங்கப்பூர் உணவு ஆணையமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சுகாதாரக் குறைபாடுகள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய மற்றும் அனைத்துலக உணவு வகைகளை அந்நிறுவனம் தயாரிக்கிறது.


Top