Images
  • folk

தமிழ்ச்சுடர் 2019 - களைகட்டும் தமிழ்ப் பாரம்பரியப் படைப்புகள்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தும் நிகழ்ச்சி தமிழ்ச்சுடர். கல்வி, கலை, புத்தாக்கம், இளம் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, நிகழ்ச்சியின்  இணை ஏற்பாட்டாளர்.

நிகழ்ச்சியில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழைப் பறைசாற்றும் படைப்புகள் இடம்பெறுகின்றன.

தமிழ்ப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் வேரூன்றியுள்ளன. அவற்றில் ஒன்றாகத் திகழும் மரபுப் பாடல்களை AK Theatre குழுவினர் படைத்தனர். நாட்டுப்புறக் கலைகளைத் தாலாட்டுப் பாட்டு, விடுகதைப் பாடல் ஆகியவற்றின் மூலம் படைப்பு வெளிப்படுத்தியது.

நிகழ்ச்சியில் கலை மூலம் தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


Top