Images
  • TTp

கைத்தொலைபேசித் தமிழ்த் தட்டச்சில் சாதனை முயற்சி: உங்களுக்கும் வாய்ப்பு!

மீடியாகார்ப் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு தமிழில் தட்டச்சு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் 'தமிழில் தட்டிப்பார்' எனும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.


நிகழ்ச்சியில் 'பலர் ஒன்றுகூடித் தமிழில் தட்டச்சு செய்யும்' சாதனை படைக்கப்படவிருக்கிறது.

சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகம் (Singapore Book of Records) அதனைப் பதிவு செய்யும்.

மேலும் தமிழில் ஆக வேகமாகத் தட்டச்சு செய்யக்கூடியவர் என்ற சாதனையும் படைக்கப்படவிருக்கிறது. அவரின் பெயரும் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும்.

இத்தகைய முயற்சி சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதன்முறை.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழும் அன்பளிப்புப் பையும் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் உணவு, விளையாட்டு, போட்டிகள் முதலியவையும் உண்டு.

இடம்: சிங்கப்பூர் பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி (Singapore Polytechnic Convention Hall)
நாள்: 22 செப்டம்பர் 2019
நேரம்: பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணிவரை
வயது வரம்பு: இல்லை
தேவை: கைத்தொலைபேசி

நிகழ்ச்சியில் கலந்துகொள்வோர் ஒரு சில வாக்கியங்களைத் தமிழில் தட்டச்சு செய்யவேண்டியிருக்கும்.

பங்குபெறுவோர் தட்டச்சு செய்ய அவர்களுக்கு விருப்பப்பட்ட எந்த முறையை வேண்டுமோ பயன்படுத்தலாம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எத்தனை பேர் வேண்டுமானாலும் நிகழ்ச்சியில் பங்கெடுக்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒருவரே பதிவு செய்யலாம்.


பதிவு செய்ய: 8359 6219 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் கீழ்க்கண்ட விவரங்களை இப்போதே அனுப்பி வையுங்கள்.

பெயர்:
பிறந்த தேதி:
சிங்கப்பூரர் / நிரந்தரவாசி:

திரளாக வாருங்கள்! திறனைக் காட்டுங்கள்! 

Top