Images
  • Tampines fan
    படம்: Ang Bee Tin/Facebook and 家在新加坡 Singapore Our Home/Facebook

தெம்பனிஸ் கோப்பிக் கடையில் காற்றாடி கட்டுப்பாடின்றிச் சுழன்று சிதைவுகள் விழுந்ததில் இருவர் காயம்

தெம்பனிஸ் வட்டாரத்தில் உணவங்காடி நிலையம் ஒன்றில் காற்றாடி கட்டுப்பாடின்றிச் சுழன்று பொருள்களில் இடித்து, சிதைவுகள் விழுந்ததில் இருவருக்குக் காயம் ஏற்பட்டது.

சம்பவம் தெம்பனிஸ் ஸ்டீரீட்-21 இல் உள்ள புளோக் 201D-இல் உள்ள Eating House-இல் நேற்று இரவு 7:10 மணியளவில் நடந்ததாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.

விபத்தில் 20 வயது ஆடவருக்கும், 82 வயது மூதாட்டிக்கும் காயம் ஏற்பட்டது.

இருவரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினரால் சாங்கி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இருவரும் சுயநினைவுடன் இருந்தனர்.

விபத்து குறித்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

காற்றாடியின் இரக்கை தெறித்து அதன் உதிரியான பாகம் பொருள்களில் மேல் இடித்ததில், சிதைவுகள் கீழே விழுந்திருக்கின்றன.

காற்றாடி விபத்து நேர்ந்த போது அதன் அருகில் ஊழியர்கள் ஏணியைப் பயன்படுத்தி வேலை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது ஏணி காற்றாடி மீது பட்டு விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

விசாரணை தொடர்கிறது.  

Top