Images
  • Tampines Fire
    (படம்: CNA)

தம்பனீஸில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் தீ - 45 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

சிங்கப்பூர்: தம்பனீஸில் (Tampines) உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பில் இன்று காலை தீ மூண்டதையடுத்து, 45 குடியிருப்பாளர்களைக் குடிமைத் தற்காப்புப் படை வெளியேற்றியுள்ளது.

தம்பனீஸ் ஸ்டிரீட் 32இன் (Tampines Street 32) புளோக் 307இல் உள்ள வீட்டில் தீ மூண்டது குறித்து, காலை ஒன்பதே கால் மணியளவில் தகவல் கிடைத்ததாய்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

வீட்டின் படுக்கையறையில் உள்ள சாமான்களால் மூண்ட தீயைத் தண்ணீர்க் குழாயின் உதவியுடன் தீயணைப்பாளர்கள் அணைத்தனர்.

சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீ மூண்டதன் காரணம் குறித்த விசாரணை இடம்பெறுகிறது.


 

Top