Images
  • veg
    (படம்: REUTERS/TOM MIHALEK)

வீட்டில் காய்கறிகளை வளர்க்க தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பு

வீட்டில் காய்கறிகளை வளர்க்க ஆசையா?

நீங்கள் தெம்பனிஸில் வசித்தால் உங்களுக்கு ஒரு நற்செய்தி.

தகுதிபெறும் குடியிருப்பாளர்கள் 50 பேருக்கு, hydroponics கருவிகள் வழங்கப்படவுள்ளன.

காய்கறிகளை வளர்க்கும் ஆர்வமிருந்தும் கருவிகளைப் பெறமுடியாதோர், Our Tampines Hub வளாகத்திற்குச் செல்லலாம்.

அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள 'Green Hut' vertical hydroponic பண்ணையில் தொண்டூழியராகச் சேவையாற்றலாம்.

hydroponics என்பது மண்ணைப் பயன்படுத்தாமல், கனிம வளம் கொண்ட நீரில் தாவரங்களை வளர்க்கும் முறை.

அடுத்த 5 ஆண்டிற்குள் தெம்பனிஸ் வட்டாரத்தைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த முதல் வட்டாரமாக உருமாற்றத் திட்டம் உள்ளது.

அதன் ஒரு பகுதியாக குடியிருப்பாளர்களுக்கு ஹைட்ரோபோனிக்ஸ் கருவிகள் வழங்கப்படுவதாக அந்த வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மசகோஸ் ஸுல்கிஃப்லி கூறினார்.

ஏற்கனவே வட்டாரவாசிகள் 600 பேர் திட்டத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரையில் கருவிகளை வழங்குவது நோக்கம்.

கருவிகளைப் பொருத்தவும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையைப் பற்றி கற்றுக்கொடுக்கவும் தொண்டூழியர்கள் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குச் செல்லவிருக்கின்றனர்.

Top