Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸில் விபத்து - பாதிக்கப்பட்டவருக்கு உதவிய பொதுமக்கள்

தெம்பனிஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் தம்பனீஸ் அவென்யூ 9இல் விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாக இன்று (மார்ச் 15) காலை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

வாசிப்புநேரம் -


(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

தெம்பனிஸ் அவென்யூ 2ஐ நோக்கிச் செல்லும் தம்பனீஸ் அவென்யூ 9இல் விபத்து ஒன்று நேர்ந்துள்ளதாக இன்று (மார்ச் 15) காலை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதிக்கப்பட்ட 53 வயது மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவத் தொடங்கியிருந்தனர்.

சம்பவத்தை நேரில் கண்ட 57 வயது திரு. சேகர் அதுப்பற்றி 'செய்தி'யிடம் கூறினார்.

(படம்: சேகர்)

காலையில் வேலைக்குச் செல்வதற்காக தெம்பனிஸ் ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார் அவர்.

"செல்லும் வழியில் தூரத்திலிருந்து ஓர் ஆடவர் போக்குவரத்தை வேறு தடத்துக்குத் திசைமாற்றிவிடுவதைப் பார்த்தேன். அருகில் சென்றபோது அங்கு ஒரு சீன மாது சாலையில் கிடந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மயங்கி விழுந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்." என்று திரு. சேகர் கூறினார்.

பெண்ணின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், விலாப் பக்கம் வலி இருப்பதாய் அவர் சொன்னதாகவும் கூறினார் திரு. சேகர்.

பெண்ணின் கைத்தொலைபேசியில் அழைப்பு வர, திரு. சேகரும் அருகிலிருந்த சீனரும் பெண்ணின் நிலை குறித்து அவருடைய உறவினரிடம் கூறினார்கள்.

(படம்: சேகர்)

அவ்வேளையில் அவசர மருத்துவ வாகனம் அங்கு சென்று சேர்ந்தது. போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை அடைந்தனர்.

ஓய்வுபெற்ற தீயணைப்பு வீரரான திரு. சேகர் அதிகாரிகளுக்கு உதவினார்.

பெண் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காவல்துறை விசாரணை தொடர்கிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்