Images
  • Tan Cheng Bock
    டான் செங் போக். கோப்புப் படம்: Melissa Zhu

புதிய அரசியல் கட்சியைத் துவங்குவதற்கான தமது விண்ணப்பம் சங்கங்கள் பதிவகத்தால் கொள்கை அளவில் ஏற்பு : டாக்டர். டான்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருமுறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர். டான் செங் போக் (Tan Cheng Bock), புதிய அரசியல் கட்சியைத் துவங்குவதற்கான தமது விண்ணப்பம், சங்கங்கள் பதிவகத்தால் கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

பதிவகம் பரிந்துரைத்த திருத்தங்களில் சிறிது மாற்றங்களை தமது கட்சி முன்மொழிந்திருப்பதாகவும், அது தொடர்பிலான இறுதிக்கட்ட முடிவை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும், அவர் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில், டாக்டர். டான், அரசியல் கட்சி ஒன்றைத் துவங்குவதற்கான தமது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர், அவரது Progress Singapore கட்சிக்கான விண்ணப்பம் அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

 

Top