Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியில் மீண்டும் இணைய திரு. டான் ஜீ சே விருப்பம்

எதிர்த்தரப்பு அரசியல்வாதி டான் ஜீ சே (Tan Jee Say), சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியில் மீண்டும் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியில் மீண்டும் இணைய திரு. டான் ஜீ சே விருப்பம்

(கோப்புப் படம்: TODAY)

எதிர்த்தரப்பு அரசியல்வாதி டான் ஜீ சே (Tan Jee Say), சிங்கப்பூர் ஜனநாயக் கட்சியில் மீண்டும் இணையவிருப்பதாகத் தெரிகிறது.

கட்சித் தலைவர் சீ சூன் ஜுவானிடம் (Chee Soon Juan), அதுபற்றித் தெரிவித்திருப்பதாக திரு. டான் Facebook பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரர்களின் நலன்களை முன்னிறுத்தும் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதால், அவ்வாறு முடிவெடுத்ததாக அவர் சொன்னார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி, துடிப்பான தலைமைத்துவம் கொண்டது என்று திரு. டான் கூறினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், மக்களுக்காக மாற்றுக் குரலை ஒலிக்கச் செய்யவும், சிங்கப்பூருக்கு வலுவான எதிர்த்தரப்புத் தேவை என்று அவர் சொன்னார்.

2011 இல் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த திரு. டான், அப்போது ஹாலண்ட்-புக்கிட் தீமா குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.

2014 இல் அவர் சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சியைத் தொடங்கினார். சென்ற வாரம், அந்தக் கட்சியை அவர் கலைத்து விட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்