Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தானா மேரா கோஸ்ட் ரோடு பணியிடத்தில் பாரந்தூக்கியின் பகுதி சரிந்தது- யாருக்கும் காயமில்லை

தானா மேரா கோஸ்ட் ரோடு பணியிடத்தில் பாரந்தூக்கியின் பகுதி சரிந்தது- யாருக்கும் காயமில்லை

வாசிப்புநேரம் -
தானா மேரா கோஸ்ட் ரோடு பணியிடத்தில் பாரந்தூக்கியின் பகுதி சரிந்தது- யாருக்கும் காயமில்லை

படம்: Safety Watch-SG Facebook

தானா மேரா கோஸ்ட் ரோட்டில் (Tanah Merah Coast Road) உள்ள கட்டுமானத் தலத்தில் பாரந்தூக்கியின் பகுதி இன்று அதிகாலை சரிந்து விழுந்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து CNA-மனிதவள அமைச்சிடம் தகவல் கேட்டது.

பாரந்தூக்கி கட்டுமானத்திற்காகக் கனரகப் பொருகள்களைத் தூக்கிக் கொண்டிருந்தபோது, அதன் கீழ்ப் பகுதி செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டுமானத் தலத்தில் China Communications கட்டுமான நிறுவனத்தின் சிங்கப்பூர்க் கிளையைச் சேர்ந்தோர் வேலை செய்து கொண்டிருந்ததாக அமைச்சு தெரிவித்தது.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.

நேற்று தெங்காவிலுள்ள (Tengah) கட்டுமானத் தலத்தில் 12 மீட்டர் உயரமுள்ள எஃகுத் தூணின் ஒரு பகுதி சரிந்தது.

கட்டுமான ஊழியர்களின் காலியான தற்காலிகத் தங்குமிடத்தின் மேல் அது விழுந்தது. அந்தச் சம்பவத்திலும் யாருக்கும் காயமில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்