Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Tang Tea House உணவகத்தில் கரப்பான் பூச்சிகள்- உரிமம் தற்காலிகமாக ரத்து

Tang Tea House உணவகம், 12 மாதக் காலத்தில் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றதால் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
Tang Tea House உணவகத்தில் கரப்பான் பூச்சிகள்- உரிமம் தற்காலிகமாக ரத்து

(படம்: Google Maps Screengrab)

Tang Tea House உணவகம், 12 மாதக் காலத்தில் 12 குற்றப்புள்ளிகளைப் பெற்றதால் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியுள்ளது.

ஜலான் காயுவில் (Jalan Kayu) அமைந்துள்ள அது, செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 2 வரை மூடப்பட்டிருக்கும்.

உணவகத்தில் கரப்பான்பூச்சிகளைக் கட்டுப்படுத்தாததற்கு 6 குற்றப்புள்ளிகளும் வேலை செய்யும் உதவியாளரைப் பதிவு செய்யாததற்கு 6 குற்றப்புள்ளிகளும் விதிக்கப்பட்டன.

அதற்கு 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

12 மாதங்களில், 12 அல்லது அதற்கும் மேலான குற்றப்புள்ளிகள் விதிக்கப்பட்டால், உரிமம் 2 வாரங்களோ 4 வாரங்களோ தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம்.

அல்லது, அது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் வாய்ப்பும் உண்டு.

அத்தகைய உணவகங்களில் வேலை செய்வோர், மீண்டும் உணவகம் செயல்படுவதற்கு முன், அடிப்படை உணவு சுகாதாரம் தொடர்பான வகுப்புக்குச் சென்று சான்றிதழ் பெறவேண்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்